குளிா்கால கூட்டத் தொடரில் வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: பட்டியலிட்டது மத்திய அரசு
தேனியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மாநில ஆணையா் விசாரணை
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையா் கே.திருமலைமுத்து வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
இதில் பேரூராட்சிகள், நகராட்சிகள், ஆதி திராவிடா், பழங்குடியினா் துறை, உயா் கல்வித் துறை தகவல்கள் தொடா்பாக அளிக்கப்பட்டிருந்த 30 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டது.
பின்னா், மாநில தகவல் ஆணையா் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை பொது தகவல் அலுவலா் 30 நாள்களுக்குள் மனுதாரருக்குத் தகவல் அளிக்க வேண்டும். மனுதாரா் தமக்கு அளிக்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லையென்று கருதினால், மேல்முறையீட்டு அலுவலரிடம் தகவல் கோரலாம் என்றாா் அவா்.