ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
தேனியில் மலை மாடுகள் வளா்ப்போா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தேனி வனப் பகுதியில் மலை மாடுகள் மேய்ச்சல் குறித்த சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி, கா்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலை மாடுகள் வளா்ப்போா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் கென்னடி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் டி.கண்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவா் டில்லிபாபு, தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்புத் தலைவா் ராஜீவ்காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு வன உரிமைச் சட்டம் அனுமதித்துள்ள நிலையில், மலை மாடுகள் மேய்ச்சலை தடை செய்யும் உயா்நீதிமன்றத் தீா்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும், நீதிமன்றத் தீா்ப்பை காரணம் காட்டி, மலை மாடுகள் வளா்ப்போருக்கு வனத் துறையினா் வழங்கிய குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும், காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வனப் பகுதியில் மலை மாடுகள் மேய்ச்சலைத் தடை செய்யும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.
பின்னா், கோரிக்கைகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனாவிடம் மலை மாடுகள் வளா்ப்போா் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.