செய்திகள் :

தேனிலவு வழக்கு: கொலைக் குற்றவாளியை கன்னத்தில் அறைந்த விமானப் பயணியால் பரபரப்பு!

post image

மேகாலயத்தில் தேனிலவு சென்ற கணவனை மனைவியே கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய விவகாரத்தில், கைதான குற்றவாளியை விமானப் பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்தவா் சோனம் (24) மற்றும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி இருவரும் மே 11 ஆம் தேதி திருமணமான நிலையில் தேனிலவு கொண்டாடுவதற்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தின் இயற்கை எழில்மிக்க சிரபுஞ்சி அருகே உள்ள நொங்கிரியாட் கிராமத்துக்கு வந்துள்ளனர்.

அங்கிருந்த ராஜா ரகுவன்ஷி திடீரென மாயமான பின்னர், அவரது உடல் 20 கி.மீ. தொலைவில் அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் பிணமாக கடந்த ஜூன் 2 கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவத்தில், ரகுவன்ஷியின் மனைவி, அவரின் காதலன் என அறியப்படும் ராஜ் குஷ்வாஹா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோனம் மற்றும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி.

5 பேரும் கைது செய்யப்பட்டு மேகாலயத்திலிருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர். அப்போது முகமூடி அணிந்து அழைத்துவரப்பட்ட குற்றவாளி ஒருவரை அங்கு விமான நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் கன்னத்திலேயே அறைந்தார். முகமூடி அணிந்தவர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

இந்தக் குற்றச் சம்பவத்தைப் பொறுத்துக் கொள்ளாமல் விமான நிலையத்தில் இருந்த பயணியே, கொலைக் குற்றவாளியை தாக்கிய சம்பவம் விடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

ராஜ் குஷ்வாஹா, விஷால் சௌகான், ஆகாஷ் ராஜ்புத் மற்றும் ஆனந்த் குர்மி ஆகிய நான்கு குற்றவாளிகளுடன் 12 பேர் கொண்ட மேகாலய காவல்துறை குழு விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர், உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து பாதுகாப்புடன் மேகாலயா காவல்துறை குழு, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஷில்லாங்கிற்குப் புறப்பட்டதை இந்தூர் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியா உறுதிப்படுத்தினார்.

இதையும் படிக்க | லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமூடி கொள்ளையர்கள்!

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு ... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க