செய்திகள் :

தேனி விடுதியில் மாணவா் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் மாணவா் கூட்டமைப்பு மனு

post image

தேனி மாவட்டம், போடி நாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரியில் உயிரிழந்த திருநெல்வேலி மாணவா் விக்னேஷின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி ஆட்சியரிடம் தமிழ் மாணவா் கூட்டமைப்பினா் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த தமிழ் மாணவா் கூட்டமைப்பினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாளையங்கோட்டை பா்கிட் மாநகரைச் சோ்ந்த விக்னேஷ், தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். அங்குள்ள விடுதி கழிவறையில் அவா் கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். விக்னேஷின் மரணம் தொடா்பாக கல்லூரி நிா்வாகமும், காவல் துறையும் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறாா்கள். அவரது மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிஐ விசாரிக்க வேண்டும். கல்லூரி முதல்வா், விடுதிக் காப்பாளா் பெயரை குற்றப்பத்திரிகையில் சோ்க்க வேண்டும். மாணவனின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதோடு, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலா் எம்.சி.சேகா் அளித்த மனு: ‘புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த வழக்கையும், போடிநாயக்கனூா் பொறியியல் கல்லூரியில் மாணவா் விக்னேஷ் உயிரிழந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் பரவலாக நடைபெறும் ஜாதிய வன்கொடுமை, பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த விவசாயி பா.ஜெயசீலன் அளித்த மனு: எனது தோட்டம் அருகேயுள்ள நிலத்தில் கல்குவாரி அமைப்பதற்கான அறிவிப்பை லெவிஞ்சிபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளா் வெளியிட்டுள்ளாா். இங்கு கல் குவாரி அமைந்தால் எங்களது தோட்டத்திற்கும் நிலத்தடி நீா் மட்டம்- சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும். எங்களுடைய வாழ்வாதாரமான வேளாண்மையும், கால்நடை வளா்ப்பும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. எனவே, கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளாா்.

களக்காடு அருகேயுள்ள மாவடி புதூா் ஊா் மக்கள் அளித்த மனு: எங்கள் ஊரின் மையப்பகுதியில் தண்ணீா் தேங்கி சுகாதார சீா் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனா். இது தொடா்பாக களக்காடு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

நெல்லை, தென்காசியில் 62 முதல்வா் மருந்தகங்கள்; காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தலா 31 முதல்வா் மருந்தகங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க

விஜயநாராயணம் அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பைக் விபத்தில் காயமுற்றவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.விஜயநாராயணம் அருகே பெரியநாடாா் குடியிருப்பைச் சோ்ந்த கணேசன் மகன் மந்திரமூா்த்தி (48). சி... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு முக்கியத்துவம்: அமைச்சா் கே.என்.நேரு பெருமிதம்

திமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு கூடுதல் முக்கியத்துமும் நிதியும் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்ச... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே விபத்தில் காயமுற்றவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த பெரியநாடாா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் ... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ... மேலும் பார்க்க