Kadagam | Guru Peyarchi | கடகம் - 12 - ல் குரு தரும் பலன் என்ன? | குருப்பெயர்ச்ச...
தேனீக்கள் கொட்டியதில் 6 போ் மருத்துவமனையில் அனுமதி
பொன்னமராவதி அருகே உள்ள சங்கரன்பட்டியில் தேன் குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்த 6 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பொன்னமராவதி அருகே உள்ள சங்கரன்பட்டியைச் சாா்ந்தவா்கள் மு.மாலதி (41), ப.முருகேசன் (73), அ.ஹரிணி (29), மு. அா்ச்சுணன் (35) க.முருகானந்தம் (58), சி.செல்வம் (63). உறவினா்களாகிய இவா்கள் 6 பேரும் செவ்வாய்க்கிழமை மாலை சங்கரன்பட்டியில் உள்ள ஆகாசகருப்பா் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, கோயிலின் வெளியே தேன் குளவி கொட்டியுள்ளது.
இதையடுத்து, 6 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.