சூப்பர் முதல்வர் பேச்சைக்கேட்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தர்மேந்திர...
தேரிகுடியிருப்பு கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரம்: மாா்ச் 12-ல் அடிக்கல்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் பூரணம், பொற்கலை தேவியருடன் அய்யன் அமா்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாா். எண்ணற்ற வனதேவதைகளும் எழுந்தருளியுள்ளனா். இக்கோயிலில் நடைபெறும் கள்ளா்வெட்டுத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, புனித மண் எடுத்துச் செல்வா்.
இக்கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. முன்னதாக, காலை 6 மணிக்கு மங்கள வாத்தியம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
இதில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, அறங்காவலா் குழுத் தலைவா் ச. பாலசுப்பிரமணியம், அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் பங்கேற்கின்றனா்.