செய்திகள் :

தேவாலயங்களைக் குறிவைக்கும் ஆர்எஸ்எஸ்: பினராயி விஜயன்

post image

கத்தோலிக்க தேவாலயங்கள் நாட்டில் அதிக நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பதாக ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகை செய்தி வெளியிட்டதற்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகையான ’ஆர்கனைஸர்’ வெளியிட்ட கட்டுரை ஒன்றில் நாட்டில் அதிகளவு நிலங்களை கத்தோலிக்க தேவாலயங்கள் கைப்பற்றியிருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும், அந்த நிலங்கள் எவ்வாறு பெறப்பட்டது என்று அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தது.

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வக்ஃப் மசோதாவுக்குப் பிறகு சங் பரிவாரம் தேவாலயங்களைக் குறிவைத்துள்ளது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களின் ஆழமான விரோதத்தை வெளிப்படுத்துகிறது. தேவாலய நிலங்கள் பற்றி குறிப்பிடப்படும் தேவையற்ற கருத்துகள் ஆபத்தான அறிகுறிகளை வெளிகாட்டும் விதமாக அமைந்துள்ளன.

அந்தக் கட்டுரையின் மூலம் ஆர்எஸ்எஸ்-ன் உண்மையான நோக்கம் வெளியே வந்துள்ளது. சங் பரிவாரம் முன்வைக்கும் பெரும்பான்மை வகுப்புவாதம் மற்ற மதங்களின் மீது பகையை உண்டாக்கும் வேலையே.

சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் பெரிய திட்டத்தின் கீழ் இந்தக் கட்டுரை பகிரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இதுபற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் இதுபற்றி பேசுகையில், “முஸ்லிம்களைத் தொடர்ந்து கிறித்தவ தேவாலயங்களை கைப்பற்ற பாஜக களம் அமைத்து வருகின்றது. அந்தக் கட்டுரை முழுக்க பொய்களும் வகுப்புவாதமும் நிறைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?

ரூ. 63,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்கள்: மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மாத இறுதியில்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக மோசடி செய்தது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி: கார்கே

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ஏஐசிசி கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, மோட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத்துடன் பிரபு தேவா சந்திப்பு!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா புதன்கிழமை நேரில் சந்தித்தார்.தெலுங்கு திரைத்துறை முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு ம... மேலும் பார்க்க

நாடு கடத்தப்படும் தஹாவூா் ராணா: தில்லி, மும்பை சிறைகளில் ஏற்பாடுகள் தீவிரம்!

மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, அமெரிக்காவுக்குச் சென்றுள்ள தேசிய புல... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம்: 0.25% குறைப்பு! - ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை முடிவு இன்று வெளியாகிறது: ரெப்போ விகிதம் குறையுமா?

இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல் இருமாத நாணயக் கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பார் என்று எதிர்ப... மேலும் பார்க்க