உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில்...
குஷ்பு நடிக்கும் புதிய தொடரின் பெயர் அறிவிப்பு!
நடிகை குஷ்பு நடிக்கும் புதிய தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை குஷ்புக்கு ஜோடியாக நடிகர் அரவிந்த் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை குஷ்பு.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என பலருக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பு, சின்ன திரையில் பல்வேறு தொடர்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.
உணர்வுப்பூர்வமான கதைகளத்தைத் தேர்வு செய்து, அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நடிப்பதில் கைதேர்ந்த குஷ்பு, பல வெற்றிபெற்றத் தொடர்களைக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக இவர் நடித்த சின்ன சின்ன ஆசை, அர்த்தமுள்ள உறவுகள், மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி, நம்ப குடும்பம், ருத்ரா, பார்த்த ஞாபகம், லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மிகவும் பிரபலமடைந்தவை.
சமீபத்தில் இவர் நடிப்பில் ஒளிபரப்பான நம்ம வீட்டு மகாலட்சுமி, நந்தினி ஆகிய இரு தொடர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவ்வாறு தொடர்ந்து நடித்துவரும் குஷ்பு, தனது கணவர் சுந்தர்.சி -யின் சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளதோடு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
இதனிடையே டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் குஷ்பு முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தத் தொடருக்கு சரோஜினி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடர் ஏப். 14ஆம் தேதி முதல், இரவு 9.05 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
சரோஜினி தொடரில் குஷ்புவுக்கு ஜோடியாக நடிகர் அரவிந்த் நடிக்கவுள்ளார். இவர் தெய்வ மகள் உள்ளிட்டத் தொடர்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர். தற்போது குஷ்புவுடன் நடிக்கவுள்ளதால், இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | இளம் நடிகைக்குத் தாலி கட்டிய எஸ்.வி. சேகர்! ரசிகர்கள் விமர்சனம்!