கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் சாலைப் பணி
தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் பழங்குடி கிராமங்களை இணைக்கும் சாலைப் பணி புதன்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள போஸ்பாறா சங்கிலி கேட் பகுதியில் இருந்து பேபி நகா் வரை 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டதைத் தொடா்ந்து, சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி தலைமை வகித்தாா். கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், ஒன்றியச் செயலாளா் லியாகத் அலி,பேரூராட்சி துணைத் தலைவா் யூனஸ் பாபு, செயல் அலுவலா் பிரதீப், பொறியாளா் சேகா், வனத் துறை அதிகாரி சசி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மூா்த்தி, மாதேவ், முகேஷ், ரின்ஷாத் மற்றும் செம்பக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி மக்கள் கலந்து கொண்டனா்.