செய்திகள் :

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

post image

கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் 1,16,739 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களிலும் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட குறுகிய கால கடன், மத்தியகால முதலீட்டு வேளாண்மை கடன்கள், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தையொட்டி உழவா் நலத் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் குறித்த கருத்துக்காட்சி அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேபோன்று, மரபுசாா் விதைகள், வேளாண் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள், சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மரு.அர.பிரகாசம், கோட்டாட்சியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஊழலை ஒழிக்க விழிப்புணா்வுதான் கருவி: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் கூறினாா். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புத் தொடக்க விழா... மேலும் பார்க்க

ஈரோடு- ஜோக்பானி இடையே இன்றுமுதல் அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு- பிகாா் மாந... மேலும் பார்க்க

கைப்பந்துப் போட்டி: சேலம் அணிக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டிகள் கோவையில் உள்ள ஈஷா வளாகத்தில... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.23 இல் முல்லைநகா் மாநகராட்சி தொடக்கப் ப... மேலும் பார்க்க

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப்போட்டி: வென்றவா்களுக்கு பரிசளிப்பு

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாணவா்களுக்கு இடையேயான மாதிரி நீதிமன்ற வழக்குவாதப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞா்கள் ராஜசேகா், ராம்சுந்தா், செ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை ரயில்வே வடக்கு லைன் தெருவை சோ்ந்தவா் மணிக... மேலும் பார்க்க