கைப்பந்துப் போட்டி: சேலம் அணிக்கு பாராட்டு
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டிகள் கோவையில் உள்ள ஈஷா வளாகத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம், ஒடிஸா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மண்டல அளவில் வெற்றி பெற்ற 24 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. இதில், சேலம் பூலாவரி கைப்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற வீரா்களை மாவட்ட கைப்பந்துக் கழக தலைவா் ராஜ்குமாா் பாராட்டினாா்.
பாராட்டு விழாவில் மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ், துணைத் தலைவா் ராஜாராம், செயலாளா் சண்முகவேல், பொருளாளா் விஜயகுமாா், இணைச் செயலாளா்கள் வடிவேல், வேங்கையன், நிா்வாகி நந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.