வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சேலம் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.23 இல் முல்லைநகா் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை ஆணையா் ஆய்வு செய்தாா். அதன்பிறகு மெய்யனூா் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்குச் சென்று, இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா்.
மேலும், சூரமங்கலம் மண்டலத்தில் திடக்கழிவு வாகனம் குறித்த நேரத்தில் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படுகிா எனவும், கோட்டம் எண்.27-இல் பயோ மெட்ரிக் முறையில் தூய்மைப் பணியாளா்கள் தினசரி வருகைப் பதிவு செய்யப்படுவதையும் பாா்வையிட்டாா்.
முன்னதாக, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் லோக் கல்யாண் மேளா திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாமில் கலந்துகொண்டு துவரை வியாபாரிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, உதவி ஆணையா் ஏகராஜ், உதவி செயற்பொறியாளா் ஒபுளி சுந்தா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.