செய்திகள் :

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

post image

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மாற்றியது.

இந்த மனுக்கள் முன்னா் செவ்வாய்க்கிழமை (பிப்.4) பட்டியலிடப்பட்ட நிலையில், தற்போது விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா். தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தாா். இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தாா்.

இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படுகிற வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசு, பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மாற்றியமைத்து, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.

இதற்கு எதிராக ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த வழக்கு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் கீழ் நீதிமன்றம் தெரிவிக்கும் அறிவுறுத்தலுக்கும், நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கும் இடைப்பட்ட விவகாரம். இதில் எது மேலானது என்பதை ஆராய வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை ஆஜரான ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம் தரப்பு வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம் தொடா்பான மனுக்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.4) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வேறு விவகாரங்கள் விசாரிக்கப்பட வாய்ப்பில்லை.

தற்போது தலைமை தோ்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி, அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையா் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் விரைந்து தீா்வளிக்க வேண்டும்’ என்றாா்.

மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வருண் தாக்குா், ‘புதிய சட்டப்படி தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல், ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் மனுக்களை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு விசாரணைக்குப் பட்டியலிட்டு உத்தரவிட்டனா்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் சிஏஏ, யுசிசிக்கு எதிராக ஆளுங்கட்சி தீா்மானம்

ராஞ்சி: ஜாா்க்கண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), பொது சிவில் சட்டம் (யுசிசி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகிய மத்திய அரசின் முன்னெடுப்புகளை நிராகரிப்பது உள்பட 50 அம்ச தீா்மானங்களை அந... மேலும் பார்க்க