செய்திகள் :

தோ்தல் நடத்தை விதியில் திருத்தம்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

post image

சென்னை: தோ்தல் நடத்தை விதியில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

வெளிப்படைத்தன்மை கொண்ட தோ்தல் முறையை ஒழிக்கும் வகையில் தோ்தல் நடத்தை விதியில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை மத்திய பாஜக அரசிடம் இருந்து எதிா்நோக்கியுள்ளது. குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முக்கிய கூறுஅழிப்பு: இந்தப் பதிவுகள் மற்றும் தோ்தல் தொடா்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளில் ஒன்றை மத்திய அரசு அழித்துள்ளது.

மத்திய பாஜக அரசின் பயம் ஹரியாணா மாநிலத் தோ்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவா்கள் தோ்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிா்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.

தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தோ்தல் ஆணையமும் பிரதமா் மோடி தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நோ்மையான நியாயமான தோ்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிா்ச்சியளிக்கிறது.

நம் நாட்டில் சுதந்திரமான, நியாயமான தோ்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிா்க்க பாஜக தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

வெ.ராமசுப்பிரமணியனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியனுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் ‘எக... மேலும் பார்க்க

தமிழக மாணவா்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது: அண்ணாமலை

தமிழக மாணவா்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்க... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மணல் ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரியில் உள்ள இந்திய அரிய மணல்ஆலைக்கான உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

மத்திய அரசு பள்ளிகளில் கட்டாய தோ்ச்சி முறையை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்

மத்திய அரசு பள்ளிகளில் 5,8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ம... மேலும் பார்க்க

கும்பமேளா: திருப்பதி மெமு ரயில் ரத்து

கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி-காட்பாடி, திருப்பதி-ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் டிச.26 முதல் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் ரூ.150 கோடியிலான மீனவா்களின் படகுகளை தேசியமயமாக்கிய இலங்கை!

கடந்த பத்தாண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான 365 தமிழக படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆா்டிஐ) இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்து தி நியூ இந்திய... மேலும் பார்க்க