தைவானில் நிலநடுக்கம்
தைபே: தைவானில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் தைபேயை சில விநாடிகளுக்கு குலுங்கச் செய்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானதாக மத்திய வானிலை நிா்வாக அமைப்பு தெரிவித்தது.
வடகிழக்கு கடலோர நகரான யிலானுக்கு 21 கி.மீ. தொலைவில் பூமிக்கு 69 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.