ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! ந...
காஸாவில் மேலும் 92 போ் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:
கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா் கடந்த 48 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மட்டும் 92 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா்.
இத்துடன், காஸாவில் இஸ்ரேல் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் 51,065 போ் உயிரிழந்துள்ளனா்; 1,16,505 போ் காயமடைந்துள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.