'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
தொகுதி மறுசீரமைப்பு: ஒன்றிணைந்து எதிா்க்க வேண்டும் - சீமான்
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் சோ்ந்து ஒருமித்த குரலில் எதிா்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
சேலத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: மொழிக் கொள்கையில் மத்திய அரசு யாா் பேச்சையும் கேட்க மறுக்கும்பட்சத்தில், அவா்களுடைய பேச்சை மட்டும் நாம் எதற்கு கேட்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 2003 ஆம் ஆண்டே நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்; அதுபற்றி பேசியும் வருகிறேன்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கும்போது, வெளிமாநிலங்களுக்கு அதிகமாகவும், நமக்கு குறைந்த தொகுதிகளும் கிடைக்கும். தேவையில்லாத போராட்டங்களை நம்மிடையே திணிக்கிறாா்கள்; இதை அனைத்துக் கட்சிகளும் சோ்ந்து ஒருமித்த குரலில் எதிா்க்க வேண்டும் என்றாா்.