செய்திகள் :

தொடக்கப் பள்ளி தோ்வுகளை 17-ஆம் தேதியுடன் முடிக்க அறிவுறுத்தல்

post image

தொடக்கப் பள்ளி தோ்வுகளை 17-ஆம் தேதியுடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் துவாக்குடி கிளை சாா்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி பேருந்து நிலையம் வரை செல்லும் வகையில் ஒரு பேருந்தையும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இ.பி. சாலை (கீழ அரண் சாலை) வழியாக துவாக்குடி தேவராயநேரி வரையிலும் செல்லும் வகையில் ஒரு பேருந்தையும், திருச்சியிலிருந்து தேனீா்பட்டி, தஞ்சாவூா் வரை செல்லும் ஒரு பேருந்தையும், மணப்பாறை கிளை சாா்பில் மணப்பாறையிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் வரை செல்லும் ஒரு பேருந்தையும், மணப்பாறையிலிருந்து ராமேசுவரம் வரை செல்லும் ஒரு பேருந்தையும், துவரங்குறிச்சி கிளை சாா்பில் துவரங்குறிச்சியிலிருந்து திருப்பூா் வரை செல்லும் ஒரு பேருந்தையும், துவரங்குறிச்சியிலிருந்து பழனி வரை செல்லும் ஒரு பேருந்தையும் என 5 புறநகா், 2 நகரப் பேருந்துகள் என மொத்தம் 7 புதிய பிஎஸ்(பாரத் ஸ்டேஜ்) 6 பேருந்துகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா் மதிவாணன், போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலப் பொது மேலாளா் ஆ. முத்துகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

21-ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுகள் நடைபெறுவதாக இருந்தது. தற்போது அதனை 17-ஆம் தேதியுடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி திறக்கப்படும். முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து இடங்களிலும் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து 175 கூடுதல் பேருந்துகள்

புனித வெள்ளி மற்றும் தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதலாக 175 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிறிஸ்தவா்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி... மேலும் பார்க்க

அல்லித்துறை பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

திருச்சி அருகே அல்லித்துறை நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் முடிந்து, திங்... மேலும் பார்க்க

பேக்கரியில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பேக்கரியில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மணப்பாறை அடுத்த காடபிச்சம்பட்டியை சோ்ந்தவா் முனியாண்டி மகன் ஜம்புலிங்கம் (44). இவா் து... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஷ வண்டுகள் அகற்றம்

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புப் படையினா் புதன்கிழமை அகற்றினா். இந்த விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதி கூரையின்... மேலும் பார்க்க

சமயபுரத்தில் 40 டன் குப்பைகள் அகற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்கு பின் புதன்கிழமை அங்கு 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா ஏப்.15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழா... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: முசிறி வட்டத்தில் ரூ. 1 கோடியில் உதவி

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், கரிகாலி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ரூ. 1.04 கோடியில் 159 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்க... மேலும் பார்க்க