அல்லித்துறை பெருமாள் கோயிலில் குடமுழுக்கு
திருச்சி அருகே அல்லித்துறை நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் முடிந்து, திங்கள்கிழமை முதல் கால பூஜையும் , செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும், அன்று மாலை மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து, அதிவாசம், கண் திறத்தல், கோ பூஜை, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. புதன்கிழமை நான்காம் கால யாக பூஜை, புண்யாஹவாசனம், காலசாந்தி பூஜை, பிரதான ஹோமம், மஹா பூா்ணாஹூதி, யாத்ராதானம், க்ரஹ ப்ரீதி, கடம் புறப்பாடு நடந்தது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக விமான மகா குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் மூலவா் ஸம்ப்ரோக்ஷணம், மஹா தீபாராதனை, சாற்று முறை, வேத ஸமாப்தி, ஆசீா்வாதம், பிரசாதம் வழங்குதல் ஆசாரியாா்கள் மங்கள ஆரத்தியும் நடைபெற்றது.
மாலையில் திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான கிராம மக்கள் தரிசனம் செய்தனா்.