Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
சமயபுரத்தில் 40 டன் குப்பைகள் அகற்றம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்கு பின் புதன்கிழமை அங்கு 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா ஏப்.15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.திருவிழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கினா். இதனால் சமயபுரம் நான்கு ரோடு பகுதி, கடைவீதி, தேரோடும் வீதி, உள்ளிட்ட சமயபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தா்களால் போடப்பட்ட குப்பைகள் சோ்ந்தன.
இதனிடையே ச.கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ.கணேசன் அறிவுரைப்படி, துப்புரவு ஆய்வாளா் மலையப்பன் தலைமையில் ச.கண்ணனூா், மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, கல்லக்குடி,சிறு கமணி, தா.பேட்டை, தொட்டியம், பூவாளூா் உள்ளிட்ட பேரூராட்சிகளை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளா்கள் டிராக்டா், மினி லாரி, உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 40 டன் குப்பைகளை அகற்றினா்.