Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து 175 கூடுதல் பேருந்துகள்
புனித வெள்ளி மற்றும் தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதலாக 175 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கிறிஸ்தவா்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு நகரங்களுககு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய நகரங்களுக்கும், அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மேலும் ஏப்.18, 19, 20 ஆகிய தேதிகளிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். மீண்டும் தொடா் விடுமுறை முடிந்து அவரவா் இருப்பிடம் திரும்பும்வகையில் இந்தப் பேருந்துச் சேவை தொடரும் என திருச்சி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், முன்பதிவு செய்வதன் மூலம் எந்தச் சிரமமும் இன்றி பயணிப்பதோடு, பயணிகளின் தேவைக்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவுச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.