செய்திகள் :

தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

post image

மும்பை: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராக இருப்பதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று சற்று உயர்ந்து முடிந்தது. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 24,400 மற்றும் 77,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடந்தது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 ஆகவும், நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 ஆகவும் நிலைபெற்றது.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.5 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு கிட்டத்தட்ட 1 சதவிகிதமும் உயர்ந்து. ஊடகங்கள், பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்ந்தது முடிந்தது.

சீனாவிற்கான என்விடியா கார்ப்பரேஷனின் சிப் ஏற்றுமதிக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் தொழில்நுட்ப பங்குகள் சரிவுக்கு இது வெகுவாக வழிவகுத்தது.

ஐரோப்பிய குறியீடுகள் இன்று ஏற்ற-இறக்கத்தோடு வர்த்தகமானது. ஆசிய சந்தை கலவையான குறிப்பில் முடிவடைந்தது. தைவான் சரிந்த நிலையில் ஹேங் செங் தலா 2 சதவிகிதம் சரிந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 0.5 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

நிஃப்டியில் மாருதி சுசூகி, ஹிண்டால்கோ, பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்து. இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், டிரென்ட், ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் 122 சதவிகிதம் உயர்ந்ததால், 3 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது. ஒருங்கிணைந்த லாபம் 48 சதவிகிதம் உயர்ந்ததால் ஐஆர்இடிஏ பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 7 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு ஒதுக்கீட்டை குறைத்ததையடுத்து மகாநகர் எரிவாயு பங்குகள் 5 சதவிகிதம் சரிந்து முடிந்தது.

நாராயணா ஹிருதயாலயா, ஈச்சர் மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ கார்டுஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், சம்பல் பெர்டிலைசர்ஸ், அஸ்ட்ராஜெனெகா பார்மா உள்ளிட்ட 80 பங்குகள் 52 வார உயர்வை பதிவு செய்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.6,065.78 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.91 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 65.22 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: எஸ்பிஐ-யின் வட்டி விகிதம் குறைப்பு

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!

புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான, எம்.டி.என்.எல். ஏழு பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.8,346.24 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக நிறுவனம் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய... மேலும் பார்க்க

மார்ச்சில் புதிதாக 4,440 5ஜி நிலையங்கள்!

நாட்டில் மார்ச் மாதத்தில் மட்டும் கூடுதலாக 4,440 5ஜி இணைய சேவைக்கான நிலையங்கள் (கோபுரங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் காந்தி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் பு... மேலும் பார்க்க

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில்... மேலும் பார்க்க

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க