தமிழகத்தில் பரவும் ‘தக்காளி காய்ச்சல்’: சுகாதாரத் துறை நிபுணா் அறிவுறுத்தல்
தொப்பூா் கணவாய் சாலையில் லாரிகள் மோதி கவிழ்ந்தன
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் லாரிகள் மோதி கவிழ்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
மகாராஷ்ட்ர மாநிலம், புனேவில் இருந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு டேங்கா் லாரி ஒன்று கச்சா எண்ணெய் பாரத்துடன் சென்று கொண்டிருந்தது. லாரியை, ஓட்டுநா் செந்தில் என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்த லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயைக் கடந்து காவலா் குடியிருப்பு வளாகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளும் சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் செந்தில் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தொப்பூா் காவல் துறையினா் விபத்துக்குள்ளான லாரிகளை சுங்கச் சாவடி பணியாளா்கள் உதவியுடன் மீட்டு அகற்றினா். இந்த விபத்தால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.