சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி
தொலைக்காட்சிகளில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்!
பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் திருநாள் இருநாள்களிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி சேனல்களில் காலை முதல் இரவுவரையில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன.
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளன்று, காலை 10.30 மணிக்கு விஷால் நடித்த ரத்னம், மதியம் 3.30 மணிக்கு ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான பிரதர், மாலை 6.30 மணிக்கு கோட் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. தொடர்ந்து, புதன்கிழமையில் மாட்டுப் பொங்கல் நாளன்று மதியம் 3.30 மணிக்கு அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2 படமும் ஒளிபரப்பப்படுகிறது.
விஜய் டிவி
விஜய் டிவியில் செவ்வாய்க்கிழமையில் மதியம் 12.30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படமும், மாலை 5.30 மணிக்கு சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படமும் ஒளிபரப்பப்படுகிறது. மாட்டுப் பொங்கல் நாளன்று (ஜன. 15), மாலை 6 மணிக்கு கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் படமும் ஒளிபரப்படுகிறது.
இதையும் படிக்க:பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார்: சீமான்
சன் டிவி
சன் டிவியில் பொங்கல் திருநாளன்று, காலை 11 மணிக்கு நெல்சன் தயாரிப்பில் கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் படமும், மாலை 6.30 மணிக்கு ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும் ஒளிபரப்பப்படுகிறது.
கலைஞர் டிவி
பொங்கல் திருநாளன்று, செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படமும், மாலை 6 மணிக்கு அஜித்தின் துணிவு படமும் ஒளிபரப்பப்படுகிறது.
தொடர்ந்து, புதன்கிழமை காலை 10 மணிக்கு சூரி நடிப்பில் வெளியான கருடன் படமும், மாலை 6 மணிக்கு விடுதலை பாகம் 1 படமும், இரவு 9.30 மணிக்கு ஜெயம் ரவி நடித்த அகிலன் படமும் ஒளிபரப்பப்படுகிறது.
விஜய் சூப்பர்
விஜய் சூப்பர் டிவியில் பொங்கல் திருநாளன்று, மதியம் 12 மணிக்கு சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் படமும், காணும் பொங்கல் திருநாளன்று (ஜன. 16) மாலை 6.30 மணிக்கு டோவினோ தாமஸ் நடித்த ஏ.ஆர்.எம். படமும் ஒளிபரப்படுகிறது.