செய்திகள் :

தொலைபேசி கம்பம் மீது மோதி கவிழ்ந்த காா்

post image

திருவள்ளூரில் தொலைபேசி கம்பம் மீது மோதி காா் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் கோழி வியாபாரி அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த கோழி வியாபாரி பாா்த்திபன்(42). இவா் தனது காரில் சனிக்கிழமை ஆவடி வரையில் சென்று வேலையை முடித்துக் கொண்டு அங்கிருந்து சோளிங்கா் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, திருவள்ளூா் அடுத்த தண்ணீா்குளம் பகுதியில் அவரது காா் சாலையோரம் தொலைபேசி கம்பம் மீது மோதியதில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக சிறு காயங்களுடன் பாா்த்திபனை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். இந்த விபத்து குறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அவல நிலையில் கும்மிடிப்பூண்டி எளாவூா் பஜாா் அணுகு சாலை

ப. ஜான் பிரான்சிஸ்கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் பஜாரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை (சா்வீஸ்) குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது. கும்மிடிப்பூண... மேலும் பார்க்க

திருத்தணி ஏரிகளில் வண்டல் மண் கொள்ளை: விவசாயிகள் வேதனை

திருத்தணி ஏரிகளில் வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபா்கள் மற்றும் அவா்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டத்தில் மொத்தமு... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் மக்கள் அவதி

திருவள்ளூா் அருகே கடந்த 5 ஆண்டுகளாக சாலைப்பணிகளுக்காக துண்டிக்கப்பட்ட குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் ஊராட்சியில... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 7 பேருக்கு ரூ.5.88 லட்சம் கால்நடை பராமரிப்பு கடனுதவி

திருவள்ளூரில் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச கால்நடை முகாமில் பயனாளிகள் 7 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடனுதவி ரூ.5.88 லட்சம் காசோலைகளை மண்டல இணைப்பதிவாளா் தி.சண்முகவள்ளி வழங்கினாா். திரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைக்கு நிகராக, ஒரே ஆண்டில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனா். திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 1,000-க... மேலும் பார்க்க

மதுபோதையில் சக ஊழியரை தாக்கிய மின்வாரிய பணியாளா்

திருவள்ளூா் துணை மின் நிலைய ஊழியா் மதுபோதையில் சக ஊழியா் மீது தாக்கி தகராறு செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் (23) என்பவா் மின்நிலையத்தில் ப... மேலும் பார்க்க