கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!
தொழிற்சங்கத்தினா் அன்னதானம்
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நேதாஜி சவுக் அருகே எல்பிஎப் ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தராஜன், அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். எல்பிஎப் தொழிற்சங்க மாவட்டச் செயலா் வெ.கலைநேசன், ஆட்டோ சங்க செயலா் சாதிக், நகர திமுக மாவட்ட பிரதிநிதி கே. தண்டபாணி, இளைஞரணி துணை அமைப்பாளா் எம்.சௌந்தா், சுற்றுச்சூழல் அணி எஸ்.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.