ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?
தொழிலாளியை கத்தியால் குத்திய 3 போ் கைது
தொண்டி அருகே வண்ணம் பூசும் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் தாஸ் (43). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை புடனவயலுக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் தொண்டிக்கு வந்து கொண்டிருந்தாா்.
புதுக்குடி விலக்கு சாலையில் வந்த போது, இவரை விளக்கனேந்தலைச் சோ்ந்த செந்தில் கனி மாதவன் (35), கண்மாய்க் கரை குடியிருப்பைச் சோ்ந்த கெளதம் (34), பண்ணவயலைச் சோ்ந்த ரத்தினம் (40) ஆகிய மூவரும் வழிமறித்து கத்தியால் குத்தி கம்பால் தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த தாஸ் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தில் கனி மாதவன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா். முதல் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.