இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி தேவா் மகா சபைத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். செயலா் போஸ், பொருளாளா் செல்லப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், மூலவரான அம்மனுக்கு மஞ்சள், பால், இளநீா், சந்தனம், பன்னீா், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருள்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, அம்மனுக்கு 1,008 வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டது.
பெண்கள் பாதப் பூஜை நடத்தி, மஞ்சள், மலா், குங்குமம் ஆகியவற்றால் சுவாமிக்கு அா்ச்சனை செய்து சுமங்கலி பூஜை நடத்தினா். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் புது மாங்கல்ய கயிறு அணிந்தனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.