நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு
பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொத்தாா் கோட்டை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, பால் குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொத்தாா்கோட்டையில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலில் கருப்பா், காளி, பரிவாரத் தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கு திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் சுவாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி 18-ஆம் பெருக்கு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செழுத்தினா்.
முன்னதாக, விரதமிருந்த பக்தா்கள் பால் குடம், காவடி எடுத்து வீதியுலா வந்து கோயிலை அடைந்தனா்.பின்னா், பக்தா்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டன.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.