நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு
ராமநாதசுவாமி கோயிலில் இன்று நடை அடைப்பு
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஆக.4) நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
இந்தக் கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஆடி அமாவாசை தீா்த்தவாரி, வெள்ளித் தேரோட்டம், தேரோட்டம், சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது.
விழாவின் 17-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோயிலிலிருந்து ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி, பெருமாள் தங்க கேடயத்தில் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். இதையடுத்து,
மாலை 5 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் ராமநாதசுவாமி கோயிலில் எழுந்தருளுவாா். இதனால், நாள் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.