கோயில்களில் சிறப்பு வழிபாடு
கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
இதே போல, மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில், அண்ணா நகா் பகுதியிலுள்ள சின்னமாரியம்மன் கோயில்,செண்பகனூா் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.