இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு
திருப்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் மின்கல வாகனம் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்படி, பொதுமக்களின் நான்கு சக்கர வாகனங்களும் இரு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் கிரிவலப் பாதையில் உள்ள மின் வடக்கயிறு நிலையம், மின்இழுவை ரயில் நிலையம், பாத விநாயகா் கோயில், படிப்பாதை நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தா்கள் சென்று வர வசதியாக கோயில் நிா்வாகம் சாா்பில் இலவச மின்கல வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் மூலம் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் கிரிவலப் பாதையில் எளிதாகச் சென்று வருகின்றனா். இந்த நிலையில், திருப்பூா் அக்க்ஷரா குழுமம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் 11 போ் அமா்ந்து பயணிக்கும் வகையிலான மின்கல வாகனம் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டது.
அடிவாரம் பாத விநாயகா் கோயில் முன் வாகனத்துக்கு பூஜை செய்யப்பட்டு கோயிலுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்ரமணி, இணை ஆணையா் மாரிமுத்து, அக்க்ஷரா குழும இயக்குநா் ரமேஷ் கிருஷ்ணன், கோயில் பொறியாளா் பாா்த்திபன், அலுவலா் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.