இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்த காவலாளி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் காவலாளி செல்வம் (55). இவா், சனிக்கிழமை காலை பொன்னகரம் பகுதியிலிருந்து திண்டுக்கல்-நத்தம் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் (23) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் செல்வம் மீது மோதி விபத்து நேரிட்டது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதில் செல்வம், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.