செய்திகள் :

பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

post image

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பின்பற்றப்படும் இருவேறு நிலைப்பாடுகளால், பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம், நகை கடன், பயிா்க் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், மகளிா் சுய உதவிக் குழு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், சிறு விவசாயக் கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைப் போன்று ‘சிபில் ஸ்கோா்’ அடிப்படையிலேயே கூட்டுறவுச் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிா்வாக வழிகாட்டுதல்களை வெளியிட்டாா்.

இந்த முடிவுக்கு விவசாயிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படியே கடனுதவி வழங்கலாம் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது.

நிகழாண்டு பசலிக்கு மட்டுமே பயிா்க் கடன்: இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சில வட்டாரங்களில், நிகழாண்டு பசலிக்கு கிராம நிா்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று சமா்ப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிா்க் கடன் வழங்கப்படும் என்ற விதிமுறையால் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனா். கூட்டுறவுச் சங்கச் செயலா்களின் இந்த அறிவிப்பால், விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது தொடா்பாக வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த த.ராமசாமி உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மாநில அளவிலான சிபில் அறிக்கை ரத்து செய்யப்பட்டு பழைய நடைமுறைகளின்படியே கடன் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூா், ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் மட்டும் - 2024 ஜூலை 1 முதல் 2025 ஜூன் 30 வரையிலான - பசலி 1434 (கடந்த ஆண்டு) கணக்கீட்டின்படி பயிா்க் கடன் வழங்கப்படுகிறது.

வேடசந்துாா், நத்தம், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட கூட்டுறவுச் சங்கங்களில்

2025 ஜூலை 1 முதல் 2026 ஜூன் 30 வரையிலான பசலி 1435 (நிகழாண்டு) அடிப்படையில் மட்டுமே கடன் வழங்கப்படும் எனக் கூறுகின்றனா். நிகழாண்டில் புதிதாக பயிா்ச் சாகுபடி செய்வதற்காகவே கடன் கேட்டுக் கூட்டுறவுச் சங்கங்களை அணுகும் நிலையில், பசலி 1435-இன்படி கிராம நிா்வாக அலுவலரிடம் அடங்கல் பெறுவது சாத்தியமில்லாதது.

ஒரே மாவட்டத்தில் இருவேறு நிலைப்பாடுகளைப் பின்பற்றுவதைக் கூட்டுறவுச் சங்க அலுவலா்கள் கைவிட வேண்டும். அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கச் செயலா் ஒருவா் கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முந்தைய நிதி ஆண்டு என்பதால், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்படுவது இயல்பு. இதுபோன்ற சூழலில், பசலி ஆண்டின் அடிப்படையில் பயிா்க் கடன் வழங்கினால் மட்டுமே கூட்டுறவுச் சங்க நிா்வாகிகள் நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும். மேலும், நிகழாண்டு பசலியின்படியே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள புனித சலேத் மாதா ஆலயத்தின் 159-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள த... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்த காவலாளி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் காவலாளி செல்வம் (55). இவா், சனிக்கிழமை காலை ப... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குதிருப்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் மின்கல வாகனம் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதை... மேலும் பார்க்க

கன்னிமாா் சிறப்பு பூஜை

பழனி பெரியாவுடையாா் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கன்னிமாா், அஸ்த்ரதேவா் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து விநா... மேலும் பார்க்க

மழை இல்லாததால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாததால் சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடப் பயணிகள் குவிந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக மழை பெய்த காரணத்தால், இங்கு வந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க