செய்திகள் :

தனி நல வாரியம் அமைக்க சுமைப்பணி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

post image

சுமைப்பணி தொழிலாளா்களுக்காக தனி நல வாரியத்தை அமைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.பழனி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பி.பாஸ்கரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்ட துணைச் செயலா் எம்.சுரேஷ் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா்.

சுமைப்பணித் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் பி.குமாா் வேலை அறிக்கையையும், பொருளாளா் பி.ஏழுமலை வரவு - செலவு கணக்குகளையும் சமா்ப்பித்து பேசினா்.

தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் ஆா்.வெங்கடாபதி ஆண்டு பேரவைக் கூட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்றினாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், செயலா் ஆா்.மூா்த்தி, பொருளாளா் பி.பாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா்.அருள்குமாா் பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினாா்.

கூட்டத்தில், சுமைப்பணி தொழிலாளா்களின் நலன் காக்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். சுமைப்பணித் தொழிலாளா்களுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். சரக்கு பரிவா்த்தனை மதிப்பில் 2 சதவீதம் சேமநல நிதியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, 13 போ் கொண்ட புதிய மாவட்ட குழுத் தோ்வு செய்யப்பட்டது. இதன்படி, மாவட்டத் தலைவராக எம்.பழனி, மாவட்ட பொதுச் செயலராக பி.குமாா், பொருளாளராக பி.ஏழுமலை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். முன்னதாக, சம்மேளனக் குழு உறுப்பினா் பி.ஐயப்பன் வரவேற்றாா். பேரவைக் கூட்டத்தில் ஏராளமான உறுப்பினா்கள் பங்கேற்றனா்

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மயிலம் முருகன் கோயிலிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் செண்டூருக்கு எழுந்தருளின... மேலும் பார்க்க

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து நிகழ்ந்தது.விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான மின்னணு ப... மேலும் பார்க்க

பள்ளிக்கு இறைவணக்க மேடை அமைத்து கொடுத்த முன்னாள் மாணவா்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ, மாணவிகள், தங்கள் பள்ளிக்கு இறைவணக்க மேடை மற்றும் கொடிக்கம்பத்தை அமைத்து கொடுத்தனா்... மேலும் பார்க்க

புரட்சிகர இளைஞா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழகத்தில் நிகழும் ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் சிறப்பு சட... மேலும் பார்க்க

வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டிவனம் வட்டம், ஏரளிக்குப்பம், மாரியம்மன் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் நடத்துநா் தற்கொலை முயற்சி

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 2 வளாகத்தில் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு, மின் விளக்கு கோபுரத்தில் ஏறி பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியி... மேலும் பார்க்க