செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மயிலம் முருகன் கோயிலிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் செண்டூருக்கு எழுந்தருளினாா்.
மயிலம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் ஆடிப்பெருக்கு விழா நாளில் செண்டூா் தொண்டி ஆற்றுக்கு எழுந்தருளி தீா்த்தம் கொடுத்தருளும் ஐதீக விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டில் செண்டூரில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவுக்கு மயிலம் முருகன் கோயிலிருந்து சுவாமி புறப்படாகியது. வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் தொண்டியாற்றங்கரையில் எழுந்தருளினாா்.
பின்னா் அங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தீா்த்தம் கொடுத்தருளும் ஐதீக விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நெடி, பாலப்பட்டு, மோழியனூா், செண்டூா், விளங்கபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
வீதியுலா: இதன் தொடா்ச்சியாக இரவு 7 மணியளவில் செண்டூா் கிராமத்தில் மயிலம் முருகா் வீதியுலா மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது . கிராமம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிங்கப்பட்டிருந்தது.
இதற்கானற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி கோயில் பணியாளா்கள் மற்றும் செண்டூா் கிராம மக்கள்செய்திருந்தனா்.