Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
தொழிலாளி கடத்தல் வழக்கு: 2 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
கட்டடத் தொழிலாளி கடத்தப்பட்ட சம்பவத்தில், கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்த இரு காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த யேசுபாபு என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்டடப் பணிக்காக சென்னை வந்தாா். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த யேசுபாபுவை சிலா் கடத்தினா். அந்த கும்பல் யேசுபாபுவின் குடும்பத்தினரை தொடா்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியது.
இதுகுறித்து யேசுபாபுவின் உறவினா்கள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், கோயம்பேடு காவல் நிலையத்தில் காவலா்களாகப் பணியாற்றும் பாலசுப்பிரமணியன், வினோத்குமாா் ஆகியோா் ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவலா்கள் இருவரையும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி மேற்கு மண்டல காவல் இணை ஆணையா் திஷா மிட்டல் உத்தரவிட்டாா்.