Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
தொழிலாளி குத்திக்கொலை
தக்கலை: தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா்.
தக்கலை அருகே உள்ள மாறாங்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் மணி ( 65) (படம்) தொழிலாளி. இவருக்கு வசந்தா, ராஜம் என இரண்டு மனைவிகளும் ஒரு மகன், ஒரு மகளும்உண்டு. இதில் முதல் மனைவி வசந்தா 22, வருடங்களுக்கு முன் இறந்து விட்டாா். அதன் பின் இரண்டாவதாக திருமணம் செய்த ராஜம் 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டாா். இதே போல் மகன் வினுவும் 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டாா். ஒரே மகளான பிந்துவிற்கு திருமணம் ஆகிவிட்டது. மேக்காமண்டபம் சந்தையில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) மாலையில் வாலிபா் ஒருவா் இவரோடு தகறாறு செய்துள்ளாா். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மேக்காமண்டபம் சந்தையில் கத்திக் குத்து காயத்துடன் மணி உயிரிழந்து கிடப்பதாக கொற்றிக்கோடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாா் மணியின் உடலை கைப்பற்றி உடல் ஆய்வு கூறுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேக்காமண்டபம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளியை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.