தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சியில் ஆடு மேய்க்கும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இனாம்மணியாச்சி நடுத்தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் காசிப்பாண்டியன் (45). ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த ஓராண்டாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, வயிற்று வலியும் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].