விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!
ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி ஆட்டத்தில் மும்பையிடம் போராடி தோற்றது. அதற்கு நேர்மாறாக தொடர் தோல்விகளால் துவண்டுள்ள ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.
இந்த நிலையில், இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பானதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு தொடரில் தில்லி அணி மிகவும் பலமானதாக இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் இந்த அணி இன்று வென்றால் மீண்டும் முதலிடத்திற்குச் செல்லும்.
இதனைத் தொடர்ந்து, இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ள மைதானம் என்பதால் இன்று வெற்றியை தீர்மானிப்பதில் இரு அணிகளின் பந்துவீச்சு முக்கியப் பங்காற்றும்.