சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
நங்காஞ்சியாற்றின் குறுக்கே ரூ.9.45 கோடியில் தடுப்பணை: அமைச்சா் அர. சக்கரபாணி அடிக்கல் நாட்டினாா்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி அரசப்பபிள்ளைபட்டி அருகே நங்காஞ்சியாற்றின் குறுக்கே ரூ.9.45 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது:
இந்த தடுப்பணை கட்டப்படுவதால் அரசப்பபிள்ளைபட்டி கிராமத்துக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதனால் 35 கிணறுகள், 30 ஆழ்துளை கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்து சுமாா் 735 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீா் ஆதாரம் பெருகும் என்றாா் அவா்.
இதில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், வட்டர வளா்ச்சி அலுவலா்கள் பிரபு பாண்டியன், காமராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் தி. தா்மராஜன், எஸ்.ஆா்.கே. பாலு, முன்னாள் ஊராட்சித் தலைவா் சக்திவேல், காவேரியம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.