நடிகர் அஜித் குமாருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!
அஜித் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துபையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி, மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்துவிட்டு கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார்.
சமீபத்தில் அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை அவர் உருவாக்கினார். இந்த அணி, துபை கார் பந்தயத்திலும் பங்கேற்றுள்ளது.
தகுதிச்சுற்றில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித் குமார் ரேஸிங் அணி, துபையில் நடைபெற்ற 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
தனது அணியின் வெற்றியை அஜித் குமார் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது, உங்களின் விடாமுயற்சிக்கு (கார் பந்தயத்தில்) மிகப்பெரிய வாழ்த்துகள் ஏகே சார். இது பெருமைமிகு தருணம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சசிகுமார் - ராஜு முருகன் படப்பிடிப்பு நிறைவு!