நடிகர் கவுண்டமணி மனைவி சாந்தி காலமானார் - திரையுலகம் அஞ்சலி
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் கவுண்டமணிதான். சினிமாவுக்கு வந்த நாள் முதல் இப்போது வரை இவரின் நகைச்சுவைக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கவுண்டமணி செந்தில் கூட்டணிக்கென்றே அதிக நாட்கள் ஓடிய படங்களெல்லாம் உண்டு
கவுண்டமணி மனைவியின் பெயர் சாந்தி. இவர்களது திருமணம் காதல் திருமணம்.
சினிமாவில் உச்சத்திலிருந்தாலும் கவுண்டமணி தன் மனைவி பிள்ளைகளைப் பொது வெளியில் பெரிதாக அறிமுகப்படுத்தியதே இல்லை. சினிமா நிகழ்ச்சிகளுக்கும் கூட்டி வந்ததில்லை.
இந்நிலையில் கவுண்டமனியின் மனைவி சாந்தி கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கபட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று காலை காலமானார்.
சென்னையில் தேனாம்பேட்டையில் எச்.ஐ.இ.டி கல்லூரி எதிரே அமைந்துள்ள கவுண்டமணியின் வீட்டில் தற்போது சாந்தியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
சாந்தியின் உடல் அடக்கம் நாளை நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பலரும் சாந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.