கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!
நடிகர் சாந்தனுவுக்கு சிறந்த நடிகருக்கான விருது!
நடிகர் சாந்தனுவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்ஷன்ஸ், லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ப்ளூ ஸ்டார் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
இதில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழில் வெளியானபோதே வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற இத்திரைப்படம், செப்.21 நடைபெற்ற கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

விழாவில் சிறந்த படத்திற்கான விருதை ஜெயக்குமாரும் சிறந்த நடிகருக்கான விருதை சாந்தனுவும் வென்றுள்ளனர்.
இதையும் படிக்க: வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்!