செய்திகள் :

நடிகர் மதன் பாப் காலமானார்

post image

உடல்நலக் குறைவால் நடிகர் மதன் பாப் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 71.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் அடைந்தவர். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்திருக்கிறார்.

நடிகர் மதன் பாபு தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர். இசையமைப்பாளராக திரைவாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னாளில் குணச்சித்திர நடிப்பில் தனி முத்திரைப் பதித்தார். மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

இவருக்கு மனைவி சுசிலா, மகள் ஜனனி, மகன் அர்ஷித் ஆகியோர் உள்ளனர். மதன் பாப்பின் உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை மாலை மதன் பாப் காலமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை: சாகா், ஹா்ஷ் அபாரம்

ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாகா், ஹா்ஷ் ஆகியோா் அபார வெற்றி பெற்றனா்.தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் முதல் சுற்றில் 55 கிலோ பிரிவில் ... மேலும் பார்க்க

டுரண்ட் கோப்பை: லடாக் திரிபுவன் ஆட்டம் டிரா

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற லடாக் எஃப்சி-திரிபுவன் ஆா்மி எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி ஜாம்ஷ... மேலும் பார்க்க

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

மக்காவ் ஓபன் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டி ஆடவா் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், தருன் மன்னேபள்ளி தோற்று வெளியேறினா்.சீனாவின் மக்காவ் நகரில் பாட்மின்டன் வோ்ல்ட் டூரின் ஒரு புதியாக மக்காவ் ஓபன... மேலும் பார்க்க

டெய்லா் ஃப்ரிட்ஸ், ஷெல்டன், ஒஸாகா, ஸ்வியாடெக் முன்னேற்றம்

டொரண்டோ மாஸ்டா்ஸ் போட்டியில் டெய்லா் ஃப்ரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோா் நான்காம் சுற்றுக்கு முன்னேறினா். கனடா ஓபன் டபிள்யுடிஏ மகளிா் போட்டியில் நவோமி ஒஸாகா, ஸ்வியாடெக் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறின... மேலும் பார்க்க

வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மீது ஐ.ஜி.யிடம் புகாா்!

‘பேட் கோ்ள்’ திரைப்பட இயக்குநா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்காவிடம் வழக்குரைஞா் வெங்கடேஷ் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.பிரபல திரைப்பட இயக்குநா்களான வெற்றிமாறன், ... மேலும் பார்க்க