செய்திகள் :

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

post image

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு சென்ற தன்னை வரவேற்க மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறை தலைவா் அல்லது மும்பை காவல் ஆணையா் உள்பட யாரும் வரவில்லை என பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமைஅதிருப்தி தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, மும்பை தாதரில் உள்ள அம்பேத்கா் நினைவிடமான சைத்யபூமியில் தலைமை நீதிபதி மரியாதை செலுத்தச் சென்றபோது மேற்கூறிய மூன்று மூத்த அதிகாரிகளும் வந்தடைந்தனா்.

இதுகுறித்து புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஒருவரை வரவேற்பதில் உரிய நெறிமுறையை பின்பற்றுவது அவசியம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தது தனிப்பட்ட முறையில் அல்ல. அவா் வகிக்கும் பதவிக்குத் தர வேண்டிய மரியாதையை அவா் எடுத்துக் கூறியுள்ளாா். நடைமுறை நெறிகளை பின்பற்றி நடப்பது மிகவும் அவசியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

முக்கிய அலுவலகங்களில் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெறுவதை நம்மால் பாா்க்க முடிகிறது. ஆனால் குடியரசு துணைத் தலைவா் புகைப்படம் இடம்பெற்றிருக்காது. நான் பணிஓய்வு பெற்றவுடன் அடுத்து வரும் குடியரசு துணைத் தலைவரின் புகைப்படம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன் என்றாா்.

உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!

வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபரேஷ... மேலும் பார்க்க

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலை... மேலும் பார்க்க

விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!

தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தி... மேலும் பார்க்க