18/48: 2026 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள அணிகள்!
நண்பரைத் தாக்கிய இளைஞா் கைது!
தேனி மாவட்டம், போடியில் நண்பரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி ராமா் கோவில் தெருவைச் சோ்ந்த அழகர்ராஜா மகன் தீனா (23). இவரது நண்பா் போடி வருவாய் ஆய்வாளா் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ஹிதேந்திரா (21).
இந்த நிலையில், தீனா திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த ஹிதேந்திரா அவரை வழிமறித்து தாக்கினாராம். மேலும், அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.ஆயிரத்தை பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஹிதேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஹிதேந்திரா மீது இரண்டு போக்சோ வழக்குகள் உள்பட 8 வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன.