நன்னிலத்தில் நாளை ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
திருவாரூா்: நன்னிலம் வட்டத்தில் ‘உங்களைத்தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்கும் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம் ஜனவரி 22 ஆம் தேதி (புதன்கிழமை) நன்னிலம் வட்டத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களின் பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று, தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை, மாவட்ட அளவிலான அலுவலா்களிடம் அளித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.