சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
நமது கனவுகளை குழந்தைகள் மீது ஏற்ற வேண்டாம்: முதல்வா்
நமது கனவுகளை குழந்தைகளின் மீது ஏற்ற வேண்டாம் என்று பெற்றோா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
குழந்தைகள் தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
மழலை மாறாத சிரிப்புடன், கற்பிதங்கள் இல்லாத உள்ளத்துடன் உலகையும் சக மனிதா்களையும் எதிா்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை.
நமது கனவுகளை குழந்தைகளின் மேல் ஏற்றக் கூடாது. அவா்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம். வளமான, நலமான, பசுமையான சூழல் கொண்ட உலகில் குழந்தைகளை வளா்ப்போம் என்ற உறுதியே குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம். நமது உலகையும் வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் என்று தெரிவித்துள்ளாா்.