இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி
"நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அண்ணாமலை இன்னும்..." - திருமாவளவன்
ஈரோட்டில் நான்கு நாள்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறது.
இவ்வாறிருக்க, இச்சம்பவத்தின் குற்றவாளிகளை இரண்டு வாரங்களில் போலீஸார் கைதுசெய்யவில்லை என்றால் மே 20-ம் தேதி தன்னுடைய தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவனிடம், அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது குறித்து பத்திரிகையாளர் தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த திருமாவளவன், "பழைய தலைவர் என்பதை மறந்துவிட்டு, இன்னும் தலைவராக இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர் பேசிக்கொண்டிருக்கிறார். தன்னைத் தலைவராக எண்ணிக் கொண்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனா, அண்ணாமலையா என்பதை அவர்கள் முடிவுசெய்ய வேண்டும்" என்று கூறினார்.
#சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர் சந்திப்பில்...#Thiruma_PressMeetpic.twitter.com/RlyCihuRRC
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 6, 2025
மேலும், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவாகியிருப்பதால் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்ற மாயையை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு ஏதுவான சாத்தியக்கூறுகள் இல்லை. அவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் இருக்கிறதே தவிர, பலன் கூடுவதற்கு வாய்ப்பில்லை" என்றார்.